"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு தௌிவூட்டல் கருத்தரங்கு

"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு தௌிவூட்டல் கருத்தரங்கு
  • :

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு பிரவேசத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ பிரேன்க் (Marc- Andre Farnche) தலைமையில் அந்த முகவர் நிறுவனம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான கருத்தரங்கு 03 பிரதான அமர்வுகளின் கீழ் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்ற பிரதிநிதிகளின் பரிந்துரைகள் மற்றும் பங்களிப்பை "கிளீன் ஸ்ரீ லங்கா"  திட்டத்திற்காக பெற்றுக்கொள்வதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.

 

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம், கனேடிய உயர் ஸ்தானிகராலயம், இந்திய உயர் ஸ்தானிகராலயம், ஜப்பான், சீனா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பல சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

 

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்கள தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-02-27

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]