கொழும்பிலிருந்து கிராமத்திற்கும், அங்கிருந்து தலைநகருக்கும் பயணம் செய்ய விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பிலிருந்து கிராமத்திற்கும், அங்கிருந்து தலைநகருக்கும் பயணம் செய்ய விசேட போக்குவரத்துத் திட்டம்
  • :

கொழும்பிலிருந்து கிராமத்திற்கும், அங்கிருந்து தலைநகருக்கும் பயணம் செய்ய விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்டதுள்ளது.

இந்தப் புத்தாண்டு காலத்தில் பயணிகளுக்குத் திறமையான போக்குவரத்து வசதிகளை வழங்கும் பொருட்டு, கொழும்பிலிருந்து நெடுந்தூர மற்றும் குறுந்தூர விசேட பேருந்துச் சேவைகளை இயக்குவதன் மூலம் அரசாங்கம் விசேட போக்குவரத்துச் சேவைத் திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் ஏப்ரல் 10 முதல் 21 வரை செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த போக்குவரத்துத் திட்டத்திற்கு மேலதிகமாக 1,500 பேருந்துகளை ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ், இந்தப் பேருந்து சேவைகள் நேற்று (12) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் மற்றும் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles