உள்நாட்டுதொழில்முனைவோருக்கு, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தை வாய்ப்புக்களை அணுகுவதற்கு மற்றும் உலகலாவிய வர்த்தக வலையமைப்புடன் தொடர்புகொள்வதற்காக வேண்டியும், Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி நாடு பூராகவும் நடாத்தப்படுகிறது.
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம கடற்கரையை மையமாகக் கொண்டு நடாத்தப்படவுள்ள இந்த வர்த்தகக் கண்காட்சி குறித்து ஊடகங்கங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு நேற்று (18) வெலிகம Bay MARRIOT Resort & Spa வில் மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்னவின் தலைமையில் இடம்பெற்றது.
இதற்கமைய, இவ்வாண்டுக்கான Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி டிசம்பர் மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மு.ப 10.00 மணி முதல் பி.ப 10.00 மணி வரை மாத்தறை மாவட்டத்தின் வெலிகம கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை, Chrysalis நிறுவனம், மாத்தறை மாவட்ட செயலகம், வெலிகம பிரதேச செயலகம், பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த வர்த்தக கண்காட்சியில் 140க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு கயைாரப்பகுதி மரபுகள், D. J இசை, கெலிப்சோ இசை மற்றும் இறுதி இரவில் நேரடி இசை நிகழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.


