மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்

மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்
  • :

கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணைவாக பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்த போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்தரி,

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கென எமக்கு பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பொறுப்புகள், கடமைகள் தொடர்பில் முன்னரை விட அவதானத்துடனும், பொறுப்புடனும் மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக மாற்றுவதற்கு பணியாற்ற வேண்டும். எமது நடத்தை, வேலை செய்யும் இயல்பு மற்றும் அனைத்து விதங்களிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கென அரச ஊழியர்கள் முன்னின்று செயற்பட வேண்டுமென பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்தரி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் வருன், உதவி செயலாளர்கள் உள்ளிட்ட பிரதமர் அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

2025.01.01

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]