2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாவதுடன், டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். இதில், 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,004 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.


