மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெரும்போக செய்கைக்கான உரம் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலக மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜூனின் எற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
விவசாய மாவட்டமான மட்டக்களப்பில் பெரும் போக செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்திற்குத் தேவையான யூரியா 15054.74 மெற்றிக்தொன், TSP 3394 மெற்றிக்தொன், MOP 4138.17 மெற்றிக்தொன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தனியார் உரக் கம்பனியினருடன் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், விவசாயிகளுக்கு உரத்தைத் தடையின்றி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜேகன்நாத், விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதி கிருஸ்ணகோபால் திலகநாதன், விவசாய அமைப்புத் தலைவர்கள், தனியார் உரக் கம்பனிப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்டத்தில் செயற்கையாக உரப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


