இரத்மலானை தொழில்சார், தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் (UNIVOTEC) கல்வி பாடநெறிகளை மீண்டும் மீளாய்வு செய்தல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்குப் பொருத்தமானவாறு அவற்றின் தரத்தை அதிகரிப்பதற்காக கல்வி, கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருக்கு சிபாரிசு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு ஆறு உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதனுடன் சம்பந்தப்பட்ட நியமனங்கள் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவவினால் வழங்கப்பட்டதுடன் அக்குழு அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
• கலாநிதி ஜானக ஜயலத் - தலைவர் (கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர்)
• பேராசிரியர் துஷார சாமிந்த - உறுப்பினர் (பொறியியல் பீடம், ருகுணு பல்கலைக்கழகம்)
• பேராசிரியர் ஜே. சி. என். ராஜேந்திர - உறுப்பினர் (தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக கவுன்சிலின் உறுப்பினர்)
• கலாநிதி கே. ஏ. லலிததீர - உறுப்பினர் (பணிப்பாளர் நாயகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு)
• பொறியியலாளர் எஸ். பி. அனுர தேசப்பிரிய சேமசிங்க - உறுப்பினர் (பிரதான நிறைவேற்று அதிகாரி, மத்திய பொறியியலாளர் சேவை (தனியார்) கம்பனி, இலங்கை/ அபுதாபி
• ஹிமாலி டப்ளியு. கே. அதாவுட - ஒருங்கிணைப்பாளர் (மேலதிக செயலாளர், தொழிற்கல்விப் பிரிவு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு)


