மின்னேரியா மற்றும் கல்லோயா ரயில் நிலையங்களுக்கு இடையிலான 140 கி.மீ தூரத்திற்கு அருகில் நேற்று (19) இரவு 11.30 மணியளவில் ஏழு யானைகள் மீனகயா ரயிலில் மோதியுள்ளன.
இந்த விபத்தில், 3 குட்டி யானைகளும் 2 பெரிய பெண் யானைகளும் இறந்துள்ளதுடன், ஒரு பெண் யானையும் ஒரு குட்டி யானையும் காயமடைந்துள்ளன.
காயமடைந்த குட்டி யானை மற்றும் பெண் யானைக்கு கிரி தலே வனவிலங்கு கால்நடை மருத்துவர் குழுக்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த உடனேயே, புகையிரத திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.
வனவில ங்கு பாதுகாப்புத் திணைக்களம்