மின்சாரக் கட்டணத்திற்கு முடிந்தவரை அதிகூடிய சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யும் என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், நிலையான நிவாரண விலைக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும் கைத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஒன்றை வழங்குவதற்காகவும் மின்சார சபை மறுசீரமைப்பு இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதனால் நான்கு அரச நிறுவனங்களுக்கு முறையாக இந்த செயற்பாடுகளை வழங்குவதற்கு தயாராகி வருவதாகவும், தற்போது மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் பெருமளவிலும் மற்றும் சகல ஊழியர்களும் இதற்கு இணங்கி உள்ளதாகவும், அதன்படி அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.


