மோட்டார் வாகன இறக்குமதி மீது வித்க்கப்பட்டிருந்த தற்காலிக தடையை மூன்று கட்டங்களின் கீழ் நீக்குவதற்கு அரசாங்கம் நடவக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தனியார் பயன்பாட்டிற்கான கார்கள், வேன்கள் போன்ற மோட்டார் வாகனங்கள், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், பொருட்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் மற்றும் விசேட செயல்பாடுகள் என வகைப்படுத்தப்படும்; வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் எஞ்சின்களில் பயன்படுத்தப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு எண். 2421/44 இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளது.