The Management Club (TMC) இன் ஏற்பாட்டில் "Empowering Growth, Insightful Innovations" என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வடக்கு முதலீட்டு உச்சி மாநாட்டை Northern Investment Summit (NIS 2026) முன்னிட்டு இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, தொழில்துறை, சுற்றுலாத்துறை, சேவைத் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிகழ் நிலையூடாக கலந்து கொண்டார்.
மேலும் இக் கலந்துரையாடலில் The Management Club இன் திட்டத் தலைவர் இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, National Enterprise Development Authority இன் தலைவர் லக்ஷ்மன் அபேசேகர மற்றும் The Management Club இன் நிருவாகிகள் மாவட்ட செயலக அலுவலர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


