கொரிய அரசு தமது விவசாய மற்றும் மீன்பிடி துறைகளில் பருவகால ஊழிய பற்றாக்குறையை தீர்ப்பதற்காக E-8 வீசா வகுதியின் கீழ் பருவகால ஊழியர் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (19.02.2025) நடைபெற்ற அமைச்சரவையில் வெளிவிவகார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொரிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு குறுங்கால அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்களை சட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இருதரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக கொரிய குடியரசின் மாகாண மற்றும் நகரசபையால் (மாநில) சம்மதம் தெரிவிக்கப்பட்டள்ளது.
அதற்கமைய, தகைமை பெறும் இலங்கை தொழிலாளர்கள் மேற்சொல்லப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆகக்கூடியது மூன்று (03) ஆண்டு காலத்தில் முன்று (03) தடவைகள் வரை பணியாற்றக்கூடிய வகையில் முன்னோடி கருத்திட்டத்தை ஒருங்கிணைந்து அமுல்படுத்துவதற்காக கொரிய குடியரசின் மாகாண மற்றும் நகரசபையுடன் (மாநில) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கும், முன்னோடி கருத்திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.