நாட்டின் மாற்றத்தின் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு போல் அரச சேவையில் தலைமைத்துவத்தை வழங்குபவர்களுக்கும் உள்ளது - கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

நாட்டின் மாற்றத்தின் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு போல் அரச சேவையில் தலைமைத்துவத்தை வழங்குபவர்களுக்கும் உள்ளது - கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 
  • :

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமன்றி அரசாங்க சேவையில் தலைமைத்துவத்தை வழங்கும் அதிகாரிகளுக்கும் காணப்படுவதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் மூன்றிற்காக மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்வாங்கப்பட்ட புதிய அதிகாரிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

கல்வி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 405 புதிய அதிகாரிகளுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles