நீண்ட கால நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது என்று தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்றும், இதுபோன்ற போலி விளம்பரங்களால் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.