ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு மூலோபாயத் திட்டம் - விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு மூலோபாயத் திட்டம் - விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப  அமைச்சர் கிரிஷாந்த அபேசேன
  • :

🔸 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தேசிய கொள்கை அமைப்பதன் தேவை குறித்து அமைச்சர் அவதானம்

ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் நேற்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தேசிய கொள்கை அமைப்பதன் தேவையை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் கிரிஷாந்த அபேசேன இதன்போது வலியுறுத்தியதுடன், கிராமத்திற்குத் தொழில்நுட்பத்தைக் கொண்டுசெல்வது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கிராமத்திற்கு தொழில்நுட்பம் கொண்டுசெல்வது பிரதானமாக விதாதா அதிகாரிகள் மூலமாகவே இடம்பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டதுடன், விதாதா அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் இருக்கும்போது அதற்குப் பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த சிலிண்டெக் Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) நிறுவன அதிகாரிகள், பல தொழில்முயற்சியாளர் தமது நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் அறிந்ததில்லை எனத் தெரிவித்தனர். அத்துடன், தமது நிறுவனம் கடந்த ஆண்டில் 7 காப்புரிமைகளைப் பெற்றுள்ளதாகவும், தயாரிப்புகளை வணிகமயமாக்குவதன் மூலம் ரூ. 350 மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இளநீர் கோம்பையைப் பயன்படுத்தி இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான இரண்டு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், தொழில்முயற்சியாளர்களை விருத்தி செய்வதற்குத் தேவையான திறன்களை தமது நிறுவனம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், ஆதர் சி க்ளாக் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த அதிகாரிகள் குறிப்பிடுகையில், சிப்பிகளை வளர்க்கக்கூடிய பகுதிகளை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிதல் மற்றும் மீன் வளம் கொண்ட இடங்களை கண்டறிவதற்கான இயலுமை தமது நிறுவனத்துக்குக் காணப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் தெளிவான ஒருங்கிணைப்பு செயன்முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுடன் சம்பந்தப்பட்ட நிறுவங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]