"திட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின்" கீழ், எல்ல - நமுனுகுல - பசறை வீதியின் (B/113) அபிவிருத்திப் பணிகள் நேற்று (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA) இந்த முழுமையான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


