பாரிஸ் 2024ம் ஆண்டு உலக பரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் எப்44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனவரி 29ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் சுபாஷினி நிரஞ்சலா வீரசிங்க மற்றும் சமித்த துலானின் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிஷாந்த ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
2024ம் ஆண்டு பாரிஸ் நாட்டில் இடம் பெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றிய அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்குவை சந்தித்த சுபாஷினி நிரஞ்ஜலா வீரசிங்க என்பவர் தனது இலங்கை விஜயத்தின் போது இந்த புதிய ஈட்டியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டிருந்தார்.
சமித்த துலானின் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள்.
2016 இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில் சாதனையுடன் - தங்கப் பதக்கம்.
- 2018 இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப் - வெள்ளிப் பதக்கம்
- 2019 தேசிய பரா தடகள சாம்பியன்ஷிப் - தங்கப் பதக்கம்
- 2021 ஜப்பானில் பரா ஒலிம்பிக் விளையாட்டு - வெண்கலப் பதக்கம்
- 2022 தேசிய பரா தடகள சாம்பியன்ஷிப் - தங்கப் பதக்கம்
- 2022 இராணுவ பரா தடகள சாம்பியன்ஷிப் - தங்கப் பதக்கம்
- 2022 இந்திய திறந்த பரா தடகள சர்வதேச சாம்பியன்ஷிப் - வெள்ளிப் பதக்கம்
- 2023 ஆஸ்திரேலிய திறந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் - வெள்ளிப் பதக்கம்
- 2023 உலக சாம்பியன்ஷிப் பாரிஸ் - வெண்கலப் பதக்கம்
- 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் சீனா - வெள்ளிப் பதக்கம்
- 2024 உலக சாம்பியன்ஷிப் மொராக்கோ - தங்கப் பதக்கம்
- 2024 உலக பரா சாம்பியன்ஷிப் ஜப்பான் - வெள்ளிப் பதக்கம்
- 2024 பாரிஸ் பராலிம்பிக் போட்டிகள் - வெள்ளிப் பதக்கம்