பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) மொரட்டுவையில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
இது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு மேட்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயமாகும்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித்த பெர்னாண்டோ வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சரை வரவேற்றார்.
அதன் பின்னர், சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அதன் கடமைகள் குறித்து பிரதி அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களிடம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
தலைமையகத்தில் அனைத்து ஊழியர்களிடையே உரையாற்றிய பிரதி அமைச்சர், ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல, குடிமக்கள் மற்றும் அரச ஊழியர்களாக நாம் அனைவரும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டு திணைக்களத்தின் ஊழியர்களுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டதுடன், சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடளிலும் கலந்துக் கொண்டார்.
அமைச்சரின் வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், விஜயத்தின் முடிவில், விசேட அதிதிகள் புத்தகத்தில் தனது பதிவுகளை இட்டார்.