‘விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொறியாளர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கை இராணுவ பொறியாளர்கள் படைபணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, பிரதி அமைச்சரை நிகழ்விற்கு வரவேற்றார். இந்த கருத்தரங்கு "Adapting for the Future: Strategic Approaches of the Corps of Sri Lanka Engineers Blueprint for the Evolving Geostrategic Landscape." என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பொறியாளர்கள் படையணியின் முக்கிய பங்கை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார், இது சுற்றுச்சூழல் விடயங்களுக்கு அப்பால் சமூக மாற்றத்திற்கான பரந்த நோக்கத்தை கொண்டுள்ளது. பொறியாளர்கள், தேசிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதில் தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் நன்கு அறியப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அமைதி காத்தல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் இலங்கை இராணுவ நிபுணத்துவத்திற்கான வளர்ந்து வரும் கேள்வியை அவர் மேலும் எடுத்துரைத்தார். அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பாய்வு உலகளாவிய ஈடுபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், ஐ.நா. அமைதி காக்கும் பணிகள், மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரண (HADR) நடவடிக்கைகள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளில் பொறியாளர்கள் படையாணி முக்கிய பங்கு வகிக்கிறது.
மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) இலங்கையின் பாதுகாப்பு நிலப்பரப்பில் இவர்களின் முக்கிய பங்களிப்பை மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை பொறியாளர் படையினர் ஒரு போர் பிரிவு மட்டுமல்ல, இராணுவம் மற்றும் சிவில் களங்களில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேட்கொள்ள மற்றும் வழிநடத்த தயாராக இருப்பதாகவும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த கருத்தரங்கின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.