பாரிய பண்டாரவளை நீர் திட்டத்தின் முதலாம் கட்டமாக ஹாலி எல, குருகுதய பிரதேசத்தில் 10,000 கன மீட்டர் கொள்ளளவுடனான சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யா ரத்னவின் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.
பண்டாரவளை, தியதலாவை, ஹப்புத்தளை, ஹாலி எல, எல்ல போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உமா ஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டம் பண்டாரவளை, ஹப்புத்தளை, தியதலாவை, எல்ல, ஹால எல, போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளின் 64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 9500 மில்லியன் ரூபாய் நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.