கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன மற்றும் இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் கல்வி சார் ஊழியர்களின் பிக்குமார்களுக்கு இடையே இன்று (16) கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில், பல்கலைக்கழக நிர்வாக சபையின் தீர்மானத்தின்படி, அதன் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, பிக்கு மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
நிர்வாக சபை எடுத்த இந்த தீர்மானத்திற்கான காரணங்கள் பற்றி கல்விசார் ஊழியர்களின் பிக்குமார், பிரதி அமைச்சருக்கு அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து கல்வி அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றதனர். இதன்போது பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற தேவையான நடவடிக்கைகள் குறித்து பிரதி அமைச்சர் தனது விசேட கவனத்தை செலுத்தினார்.