காடுகளில் தீப்பற்றுவதைத் தடுப்பது தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த நாட்களில் காணப்படும் அதிக வறட்சியான காலநிலையுடன் நாடு முழுவதும் காடுகளில் தீப்பற்றக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்த தீ பற்றியதன் பின்னர் அதனை அணைப்பது மிகவும் கடினமாகும்.
அவ்வாறே அதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மீண்டும் சீரமைக்க முடியாதவை. வன பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டதற்கு இணங்க இலங்கையில் ஏற்படும் காட்டுத்தீ பல்வேறு மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டதாக அன்றி இதுவரை இயற்கையாகவே காட்டுத்தீ உருவானதாக இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என்றும் அந்தத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியது.