பேரிடர் கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக மறுவாழ்வு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைகோர்த்துள்ளன

பேரிடர் கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக மறுவாழ்வு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைகோர்த்துள்ளன
  • :
பேரிடர் கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக மறுவாழ்வு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைகோர்த்துள்ளன.

 கழிவுகளை அகற்றுதல், அத்தியாவசிய சேவைகளை மீண்டும் நிலைநிறுத்துதல் மற்றும் மீள்திறன் கொண்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக, திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த புதிய திட்டம் ஆதரவளிக்கும்.

ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியவை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் விரைவான மீட்சிக்கு உதவும் வகையில் இந்த புதிய திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று (10) கையெழுத்திட்டன.
இந்த வேலைத்திட்டம் “திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் பங்களிப்பு அணுகுமுறையின் ஊடாக பேரிடர் கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமூக வசதிகளை மறுசீரமைக்கும் திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மீண்டும் ஏற்படுத்துதல், அவசர சுற்றுச்சூழல் அபாயங்களுக்குத் தீர்வு காணுதல் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களின் மீள்திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Articles