பிரமிட் திட்டம் என்றால் என்ன?
பிரமிட் திட்டம் என்பது, ஒரு தனிநபர் திட்டத்தில் மற்றவர்களைச் இணைக்கும் உரிமையைப் பெறுவதற்கு ஒருவர் பணம் செலுத்தி அதற்கான வருமானத்தைப் பெறும் ஒரு திட்டமாக வரையறுக்கப்படுகிறது.
புதிதாக இணைக்கப்பட்டவர்களும், தொடர்ந்தும் ஏனையவர்களை இணைக்கும் உரிமையைப் பெறுவதற்காக பணம் செலுத்தப்படுவதுடன், புதியவர்கள இணைத்துக் கொள்வதனூடாக வருமானத்தைப் பெறுகின்றார்கள்.
காலப்போக்கில், புதிய நபர்கள் பெரிய அளவில் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதால், பங்கேற்பாளர்களின் ஒட்டுமொத்த படிநிலை ஒரு பிரமிட்டாக உருவாக்கப்படுகிறது, மேலும் அத்தகைய திட்டம் பிரமிட் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
பிரமிட் திட்டத்தின் தனித்துவமான சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு மட்டத்திலும், புதிய பங்கேற்பாளர்கள் இணையும்போது, திட்டத்தில் ஈர்க்கப்படும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, மிக வேகமாக அதிகரிக்கிறது.
பிரமிட் திட்டத்தின் கீழ் மட்டங்களில் உள்ள ஏராளமான பங்கேற்பாளர்கள் தவிர்க்க முடியாமல் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை பின்வரும் வழிகளில் இழப்பதைக் காணலாம்.
எனவே பிரமிட் திட்டங்கள் திட்டமிடப்பட்ட நுகர்வோர் மோசடியாகக் கருதப்படுகின்றன.


