போர்வீரர் தொழில்முனைவோர்” (Warriorpreneurship) வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இணைத் தலைமை தாங்கினார்

போர்வீரர் தொழில்முனைவோர்” (Warriorpreneurship) வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இணைத் தலைமை தாங்கினார்
  • :
போர்வீரர் தொழில்முனைவோர்” (Warriorpreneurship) வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இணைத் தலைமை தாங்கினார்

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ சதுரங்க அபேசிங்க இணைத்தலைமையில், நடைமுறையில் உள்ள "போர்வீரர் தொழில்முனைவோர் பெருமை" (Pride of Warriorpreneurship) வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஒன்று நேற்று (15 ஜூன்) கொழும்பிலுள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

 
ஓய்வு பெறவுள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படையினரை தொழில்முனைவு மற்றும் சுயதொழில் துறைகளுக்குள் வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தின் மீளாய்வு குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தபட்டது.
ஏற்கனவே காலி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "போர்வீரர் தொழில்முனைவோர்" வேலைத்திட்டம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அடுத்த கட்டமாக களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
தொழில்முனைவு தொடர்பான பயிற்றுநர்களைப் பயிற்றுவிக்கும் (Train the Trainers பாடநெறியை ஆரம்பிப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இப்பாடநெறி, திட்டத்தின் நீடித்த தன்மையையும் திறன் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், "போர்வீரர் தொழில்முனைவோர்" வேலைத்திட்டத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும், மற்றைய பிராந்தியங்களுக்கு அதனை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இவ்விரு அமைச்சுகளுக்கிடையில் உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை ஏற்படுத்துதல் மற்றும் தெளிவான நிதியளிப்பு நடைமுறையை உருவாக்குதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. திட்டத்தின் பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக, திட்டத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யவும், முன்னேற்றத்தை கண்காணிக்கவும், அமைச்சுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஒருங்கிணைப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு இணக்கம் காணப்பட்டது. வலுப்படுத்தவும் கூட்டு
 
கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், முன்னாள் படை வீரர்களின் தலைமைத்துவம். ஒழுக்கம் மற்றும் தொழில்முறை அனுபவங்களை தேசிய தொழில்முனைவு சூழலமைப்புடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தொழில்முனைவு வாயிலாக முன்னாள் படை வீரர்களை வலுப்படுத்துவது, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
 
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர், இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சினால் வழங்கப்படும் ஆதரவுகள் குறித்து விளக்கமளித்தார். அமைச்சின் ஊடாக கிடைக்கும் வசதிகள், தற்போது வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் ஓய்வுபெறவுள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவப் பணியாளர்களுக்கான தொழில்முனைவு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தக்கூடிய சட்ட மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்புகள் தொடர்பாகவும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles