இப்போதைய அரசாங்கத்தின் " முழு நாடும் ஒன்றாக " போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய திட்டத்தின் கீழ் மொறட்டுவை பிரதேச செயலாளர் பிரிவில் போதைப் பொருளை இல்லாது ஒழிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழு வின் கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மொறட்டுவை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி, ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் நேற்று (12) மொறட்டுவை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மொறட்டுவை பிரதேச செயலாளர் பிரிவில் போதைப் பொருளை இல்லாதொழிப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புக் குழு மற்றும் பிரதேசப் பொது மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய விதம், போதைப் பொருளுக்கு அடிமையான நபர்களுக்காக புனர்வாழ்வு அளிப்பதற்கான மத்திய நிலையங்களை அமைத்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது


