இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு பல்தின மீன்பிடி படகு ஒன்றுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பல்தின மீன்பிடி படகு, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் வழங்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது..


