பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின வைபவ ஒத்திகை நடைபெறும் - பாதுகாப்புச் செயலாளர்

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின வைபவ ஒத்திகை நடைபெறும் - பாதுகாப்புச் செயலாளர்
  • :
பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின வைபவ ஒத்திகை நடைபெறும் - பாதுகாப்புச் செயலாளர்
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின விழா ஒத்திகையை நடாத்துவதாகப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். 
இம்முறை சுதந்திர தின விழாவிற்காக 1,873 படை வீரர்கள் பங்குபற்றுவதுடன், அது கடந்த தடவை நடைபெற்ற சுதந்திர தின விழா மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும் 40% வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில்  77ஆவது சுதந்திர தின வைபவம் தொடர்பாக இன்று (30) இடம்பெற்ற விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் இதனை வெளியிட்டார். 
இம்முறை விமானப்படையின் விமானங்கள் 03 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே, இம்முறை யுத்த வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறவில்லை என்றும், கடற்படையினால் நண்பகல் 12.00 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கடலின் மத்தியில் கப்பலொன்றிலிருந்து மரியாதை வேட்டுக்கள் 25 தடவை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட அன்றைய தினத்திற்கு அவசியமான பாதுகாப்புத் தொடர்பாக மற்றும் போக்குவரத்து வாகனங்கள் செல்லும் விதம் என்பன குறித்துத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]