பொதுவான வானிலை முன்னறிவிப்பு

பொதுவான வானிலை முன்னறிவிப்பு
  • :

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2025 பெப்ரவரி 12 ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 12 ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை, மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலின் அல்லது இரவில்  மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Related Articles