புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன
  • :
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் முதன்மைத் திட்டமாக இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களில் என பூர்த்தி அடையும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவிப்பு

 இரண்டு வாயில்களைக் கொண்ட இந்த பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் 424 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுவதுடன் கீழ் தளத்தில் பஸ் தரிப்படமாகவும், இரண்டாவது தளத்தில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வுக்காகவும், மூன்றாவது தளத்தில் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தும் விதமாக வசதிகளை விருத்தி செய்யும் இத்திட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ் பஸ், புகையிரதம், விமானம் உட்பட சகல போக்குவரத்து ஊடகம் தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்காக புதிய தகவல் மத்திய நிலையம் ஆகியன இந்த வளாகத்தில் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

Related Articles