புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ 25வது இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
இச் சந்திப்பின் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர், லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோவின் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, உறுதியான நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றை வலியுறுத்தி, அவரது தலைமையின் கீழ் இராணுவத்தின் முக்கிய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார்.
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தின் வகிபாகத்தின் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், நல்லாட்சி, வள முகாமைத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் தொடர்பில் இராணுவத் தலைமையின் அர்ப்பணிப்பு குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.