ஸ்ரீ லங்கா எக்ஸ்போ 2026 இற்காக EDB மற்றும் SLIM இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீ லங்கா எக்ஸ்போ 2026 இற்காக EDB மற்றும் SLIM இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
  • :
 
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) என்பவற்றுக்கிடையே முன்னணி சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டுக்கான களமாக ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2026 கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதான அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

 இவ் ஒப்பந்தக் கைச்சாத்து, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜயந்த தேவஸ்ரீயினால் இரு நிறுவனங்களின்தும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து இடப்பட்டது.

ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2026, எதிர்வரும் 2026 ஜூன் மாதத்தில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த சர்வதேச கண்காட்சி இலங்கையின் பல்வேறு கைத்தொழில், உற்பத்தி, சேவை மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களை சர்வதேச சந்தைக்கு காட்சிப்படுத்துவதற்கான சிறந்த களமாக அமையும்.

Related Articles