தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிருவாக சேவைச் சங்கத்தின் பாராட்டு

தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிருவாக சேவைச் சங்கத்தின் பாராட்டு
  • :

2025 அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் பாராட்டுக் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கைனால் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி அளவினுள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேடமாக அடிப்படைச் சம்பளம் மிகவும் பெறுமதியானதாக அதிகரைப்பதன் ஊடாக பாரியளவில் குறைந்த சம்பளம் வரும் அரசாங்க ஊழியர்களுக்கு சாதாரணமாக திட்டமிடுவதற்கு அதிக முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக எமது சங்கம் அவதானித்துள்ளது.

விஷேடமாக வரியை தவிர்ப்பதற்கான நிதி கொடுக்கல் வாங்கல்கள், டிஜிட்டல் கட்டமைப்பை பயன்படுத்தி அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல், வரி சேகரிப்பு நிறுவனங்களை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர் இலக்கை வழங்குதல், வரி ஆலோசகர்கள் போன்றவர்கள் தொடர்பாக மக்களின் கருத்தை சரியான வரவு செலவுத் திட்ட அறிக்கை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வெளியிட்டமை மிகவும் பாராட்டத்தக்கது.

 


அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறே அதற்காக அவசியமான அரச வருமானத்தை பலப்படுத்துவதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நிதி காணப்படும் சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எமது சங்கம் நம்புகின்றது.

எவ்வாறாயினும் அரச சேவை சம்பள 1:4.25 மதிப்பீடு, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சிவில் நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குழுக்களுக்காக செயற்படுத்தப்படும் முறை அல்ல என்றும், அச்சேவைக்காக இளம் திறமையான அதிகாரிகளை உள்வாங்குவது ஊக்குவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக அரச நிதியின் முன்னேற்றத்துடன் கவனம் செலுத்துவது அத்தியவசியம் என்றும், தயவுசெய்து சுட்டிக்காட்டப்படுவதுடன் அவ்வாறான அரச நிதிநிலையை அடைவதற்காக எமது சங்கம் அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள் உட்பட அரசாங்கம் எடுக்கும் கொள்கைத் தீர்மானங்களை வினைத்திறனாக மற்றும் விளைதிறனாக மேற்கொள்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், நாட்டில் மறுமலர்ச்சியொன்று ஏற்படும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே, இலங்கை நிருவாக சேவைகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் உத்தரவிற்கு இணங்க அதன் செயலாளர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]