தேசிய விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் விஞ்ஞான நடைப்பவனி நேற்று (11) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தலைமையில் நடைபெற்றது.
தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் மற்றும் அதனை பிரபலப்படுத்தும் நோக்கில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் அதனுடன் இணைந்த தொழில்நுட்ப நிறுவனங்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் சகல நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


