தக்ஷின ஜீவக அபிமன் (தெற்கில் வாழும் அபிமானி) 2024 நிறுவன பாராட்டு விழா அண்மையில் (09) காலி லபுதுவ தென்மேற்கு அமைச்சு கட்டட தொகுதியின் கேட்போர் கூடத்தில் தென்மாகாண ஆளுநர் எம்.கே பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம் பெற்றது.
தென் மாகாணத்தின் ஆயுர்வேதத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு தென் மாகாணத்தின் ஆயுர்வேத துறையின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த அத்திணைக்களத்தின் நிறுவன மற்றும் ஏனைய அதிகாரிகளைப் பாராட்டும் நோக்கில் நடைபெற்றது.
தென்மாகாணத்தின் ஆயுர்வேத உற்பத்தி இலாபமீட்டும் துறையாக உருவாகியுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலும், 2024ஆம் ஆண்டில் 80 இலட்சம் பெறுமதியான இலாபமும் ஈட்டப்பட்டுள்ளது.