தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 78வது அமர்வு, பிராந்திய சுகாதார முன்னேற்றத்திற்கான பல நேர்மறையான தீர்மானங்களுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 78வது அமர்வு, பிராந்திய சுகாதார முன்னேற்றத்திற்கான பல நேர்மறையான தீர்மானங்களுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
  • :

மாநாட்டை வெற்றிகரமாக திறம்பட ஒருங்கிணைத்து சிறப்பாக செயற்பட்டதற்காக இலஙகை இந்த நிகழ்வில் பாராட்டப்பட்டது.

தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 78வது அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஆரோக்கியமான வயோதிபம் மற்றும் புகையிலை பாவனையை தடுத்தல் என்ற முக்கிய நோக்கத்துடன் தொடங்கிய இந்த மாநாடு, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சுகாதார நிதியத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், வரும் ஆண்டிற்கான பிராந்தியத்தின் சுகாதார நிகழ்ச்சி நிரலை உருவாக்குதல், முதன்மையான சுகாதார பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை எடுத்தல் மற்றும் முந்தைய ஆண்டுகளின் தீர்மானங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், மின்னணு சிகரெட்டுகள், நிக்கோடின்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் பிராந்திய நடவடிக்கைகளை உலகளாவிய தீர்மானங்களுடன் சீராக்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கத்தரினா போஹ்மே, அந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 08 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் இரண்டு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த நாடுகளின் தூதர்கள் மற்றும் பல உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உலகத்தை பாதிக்கும் பல சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு பல புதிய முடிவுகளை எடுத்தது, மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிறநாட்டு பிரமுகர்கள் இலங்கை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கும், விருந்தோம்பலுக்கும் தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் மாநாட்டின் தலைவருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கு மாநாட்டை திறம்பட நடத்தியதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வெற்றிகரமான கலந்துரையாடல்களின் தீர்மானங்களையும் கருத்துகளையும் வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் அளிப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் மாநாட்டின் தலைவருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த நிகழ்வின்போது தெரிவித்தார்.

இந்த அமர்வை நடத்த இலங்கையைத் தேர்ந்தெடுத்ததற்காக அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் இந்த அமர்வின் தலைவராக அவர் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த அமர்வின் துணைத் தலைவர்களாக சிறந்த தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக மாலைதீவின் குடியரசின் சுகாதார அமைச்சர் அப்துல்லா நசீம் இப்ராஹிம் மற்றும் பூட்டான் அரச அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் டான்டின் வாங்சக் ஆகியோருக்கும் அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ், அவரது ஊக்கமளிக்கும் தொலைநோக்கு மற்றும் உறுதியான தலைமைத்துவத்திற்காகவும், WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் (SEARO) பொறுப்பாளர் டாக்டர் கத்தரினா போஹ்மே மற்றும் அவரது குழுவினருக்கும் அவர்களின் விலைமதிப்பற்ற ஆதரவு மற்றும் பங்களிப்புகளுக்காகவும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஆரம்ப சுகாதார சேவைகளை மறுசீரமைப்பதே இன்றைய சவால் என்றும், "அனைவருக்கும் சுகாதாரம்" என்பதை அடைவதற்காக சிறந்த சுகாதார சேவையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 78வது பிராந்திய மாநாடு, மாநாட்டின் கடைசி நாளான இன்று (15) காலை சிறப்பு யோகா நிகழ்ச்சியுடன் தொடங்கியது, இதில் மாநாட்டின் தலைவர் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் நிபுணர்கள் உட்பட பிராந்திய சுகாதார அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிராந்திய பிரதிநிதிகளால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அத்துடன் முன்னைய மாநாட்டின் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

ஆசிய பிராந்தியத்தில் இதய சம்பந்தமான நோய்களைத் தடுப்பது மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான மருந்துகள் குறித்தும் கூட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்ற சுகாதார அமைச்சர்கள் மற்றும் நிபுணர்களும் தங்கள் நாடுகளில் உள்ள சுகாதார சேவைகள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Related Articles