தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாட்டிற்காக இலங்கை வருகை தந்துள்ள அங்கத்துவ நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எமது நாட்டின் சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 78வது மூன்று நாள் அமர்வுக்காக (78th Session of WHO Regional Committee for South-East Asia) வருகை தந்த பிரமுகர்கள் இலங்கை யின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி ஆகியோரைகளையும் மற்றும் சுகாதாரம் தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.
தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியின் Global alliance of vaccines and immunization -GAVI) Chief Country Delivery Officer (GAVI) தலைமை அதிகாரி திரு. தபானி மபோசா (Mr.Thabani Maphosa), மாலத்தீவு சுகாதார அமைச்சர் மேன்மை தங்கிய திரு. அப்துல்லா நாஜிம் இப்ராஹிம், (Mr.Abdulla Nazim Ibrahim), தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் மேன்மை தங்கிய. திரு. பட்டானா ப்ரோம்ஃபாட் (H.E. Mr Pattana Promphat) மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர். நளிந்த ஜெயதிஸ்ஸ இடையே சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
லெஸ்டே திமோரின் நிறுவன சுகாதார வலுப்படுத்தலுக்கான துணை அமைச்சர் மேன்மை தங்கிய திரு. ஜோஸ் டோஸ் ரெய்ஸ் மாக்னோ, தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் மேன்மை தங்கிய திரு. பட்டானா ப்ராம்ஃபாட் மற்றும் மாலத்தீவு சுகாதார அமைச்சர் அப்துல்லா நாஜிம் இப்ராஹிம் ஆகியோர் இலங்கையின் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனியைச் சந்தித்து சிறப்பு கலந்துரையாடல் நடத்தினர். நாட்டில் செயல்படுத்தப்படும் இலவச நாட்டில் செயல்படுத்தப்படும் இலவச சுகாதார சேவைக்கு பாராட்டுகளை தெரிவித்த வெளியுறவு சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், குறைந்த செலவில் சிறந்த சேவையை வழங்குவதற்காக தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இலங்கை நட்பு நாடு என்பதை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு பிரதிநிதிகள், நாட்டில் சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.
சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நாட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுகாதார சேவையை நிறுவுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ள திட்டம் குறித்து சுகாதார அமைச்சரும் துணை அமைச்சரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கினர்.
இந்த நிகழ்வுகளில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்கவும் பங்கேற்றார்.


