திட்வா சூறாவளியினால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜப்பான் அரசினால் மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி..

திட்வா சூறாவளியினால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜப்பான் அரசினால் மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி..
  • :
திட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஜப்பான், இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளது.

 இலங்கைக்கான ஜப்பானிய தூதர் Akio Isomata, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் அவற்றை இன்று (17) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு இலங்கைக்கு அவசரமாக அனுப்பப்பட்டு, அவசர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles