இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு எதிர்வரும் 2025.05.16 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப. 6.00 மணி முதல் 7.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.
தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு, பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் ஒன்றிணைந்த சேவை பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் கலைஞர்களால் முன்வைக்கப்படவுள்ளது.