வருடாந்த புதிய தேயிலை விழா நேற்று (13) எட்டாவது தடவையாக பதுளை முதியங்கன ரஜ மகா விஹாரையில் இடம்பெற்றது.
150 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இலங்கை தேயிலை கைத்தொழிலின் பிரதான கலாச்சார பாரம்பரியமான இந்த விழாவிற்கு தேயிலையை உற்பத்தி செய்யும் மாவட்டங்களை உள்ளடக்கியதான தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலைத் துறையுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் முதியங்கள ரஜமகா விகாரையின் விகாராதிபதி உட்பட மகா சங்கரத்தின தேரர், பதுளை மாவட்ட செயலாளர், பழங்குடி மக்களின் தலைவர் மற்றும் இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.