தொழில் திணைககளத்தின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ், குறிப்பாக 14 தொழிலாளர் சட்டங்கள் 04 பகுதிகளாகப் பிரித்து திருத்தப்பட உள்ளதாகவும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் அமைச்சுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு அமர்வு விவாதத்தின் போது இதனைக் குறிப்பிட்டார்.
தொழில்துறை உறவுகள், தொழிலாளர் தரநிலைகள், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் தொழிற்சங்கச் சட்டங்கள் ஆகியவை தயாரிக்கப்பட வேண்டிய புதிய தொழிலாளர் சட்டங்கள் போன்றவற்றை தொழில் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பல சந்தர்ப்பங்களில் கூடி, அதற்கேற்ப தேவையான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


