உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளிடையே உடற்தகுதி, இராணுவ தயார்நிலை மற்றும் சர்வதேச நட்புறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் பங்கேற்றனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் பி கே ஜீ எம் எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ , பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் தலைவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பிரியங்க பானகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் உப தலைவர் ஏயர் மார்ஷல் வீபி எதிரிசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் 3 பார் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஏஸ்சீ கியூஎச்ஐ, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் இருந்து தொடங்கிய சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஓட்டம் சுமார் 2.6 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறைவடைந்தது.
பங்கேற்பாளர்கள் தங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் சான்றிதழ் விநியோக விழாவுடன் நிகழ்வு நிறைவடைந்தது. ஆயுதப்படைகளில் குழுப்பணி மற்றும் உடற்தகுதியை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், முப்படைத் தளபதிகள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.