200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03.02.2025 நடைபெற்ற அமைச்சரவையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பிப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு நுகர்வுக்காக சந்தையில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தற்காலிக உள்நாட்டுத் தேங்காய் உள்நாட்டு தெங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்க இயலுமாகும் வகையில் தேங்காயை மூலப்பொருட்களாகக் கொண்டு இயங்குகின்ற தொழிற்றுறைகளுக்குத் தேவையான தேங்காய்ச்சில் (முநசநெட) மற்றும் தேங்காய்ச்சில் சார்ந்த ஏனைய மூலப்பொருட்கள் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு இணங்கி துரிதமாக இறக்குமதி செய்யக்கூடிய இயலுமையை குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி அதற்கான பொறிமுறையைத் தயாரிக்குமாறு 2025.01.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதற்கமைய, விவசாயத் திணைக்களம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தாவரத் தொற்றுக்காப்பு சேவை மற்றும் இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் இணைந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்ச்சில் மற்றும் உலர் தேங்காய்ச்சில் துண்டுகள் (கொப்பரா அல்லாத), தேங்காய் பால்ஃதேங்காய்ப் பால்மா மற்றும் பதனிடப்பட்ட தேங்காய்ப்பூ போன்றவற்றின் இறக்குமதிக்கு ஏற்புடைய வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழிகாட்டியைக் கடைப்பிடித்து கறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.