- உணவுப் பாதுகாப்பிற்காக துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசு முக்கிய கவனம்
- நேரடி நுகர்விற்காக அரிசி வழங்குவதைப் போன்றே கால்நடை தீவனம் மற்றும் பியர் உற்பத்தி போன்ற மனித நுகர்வுக்கும் ஏனைய கைத்தொழிற்துறைகளுக்கும் அரிசியை வழங்குவது அத்தியாவசியம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் முதல் முறையாக கூடினர்.
அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பான, சுகாதாரப் பாதுகாப்பான மற்றும் நிலையான உணவுக் கட்டமைப்பொன்றை உறுதி செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் நோக்கமாகும்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் தரவுகளும் தகவல்களும் மிக முக்கியமானவை என்றும், அவையின்றி முடிவுகளை எடுக்கும் அபாயத்தை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் இனியும் தயாரில்லை என்றும் எனவே, துல்லியமான தரவுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.