6ஆம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சர் கவனம்

6ஆம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சர் கவனம்
  • :
நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார  பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (22) கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.

 

இதன்போது கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரிவின் அதிகாரிகள், இலங்கை தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் சுகாதாரத் துவாய் உற்பத்திக்காக இலங்கையில் தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பிரதான 4 கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles