2025 பெப்ரவரி 23ஆம் திகதி இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 23ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் சில தினங்களில் வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் சில பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான காலநிலை காணப்படும்.
மேற்கு, சபரகமுவ, மத்திய ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடனான நிலைமை நிலவும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.