வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதுவராலயங்களின் ஊடாக தாமதம் இன்றி பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய டிஜிட்டல் வசதிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (06) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது.
தூதுவராலயங்கள் 07 இல் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.
அதன்படி ஜப்பான், கட்டார், குவைத் தூதுவராலயங்கள், மிலானோ, டொரன்டோ, மெல்பர்ன் மற்றும் துபாய் கவுன்சிலர் அலுவலகம் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் தாமதம் இன்றி பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.