18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2025 ஜனவரி 19 அன்று சேதமடைந்த வீரையடி குளத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர். மேலும் மண்அரிப்பு மற்றும் சேதத்தைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினர் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த உடனடி நடவடிக்கையானது சுற்றியுள்ள சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க உதவியது.