அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகள் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம வின் தலைமையில் சொறிக்கல்முனை 01 கிராமத்தில் நேற்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அஸ்வெசுவ நலன்புரி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பல படிமுறைகளை நீதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தியதுடன், அதன் இறுதி படிமுறையாக அஸ்வெசும நலன்புரிக்காக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் சேகரிக்கும் பணிகள் ஜனவரி 21 முதல் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.