யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட்களுக்கு விஜயம்

யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட்களுக்கு விஜயம்
  • :

புதிய யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 3 ஜனவரி 2025 அன்று 55 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, தளபதிக்கு படைப்பிரிவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றியதனை தொடர்ந்து குழு படம் எடுத்துகொண்டார். கிளிநொச்சியில் உள்ள போர்வீரர் நினைவுச் தூபி மற்றும் சிமிக் பூங்கா உள்ளிட்ட 551 வது காலாட் பிரிகேட்க்கும் தளபதி அவர்கள் விஜயம் செய்ததைத் தொடர்ந்து 553 வது காலாட் பிரிகேடிக்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது, யாழ். பாதுகாப்புப் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தகுதியான குடும்பத்திற்கு, பள்ளிக்குடா, பூநகரினில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றின் சாவிகளை சிரேஷ்ட அதிகாரி கையளித்தார். 22 வது விஜயபாகு காலாட்படை படையணியினால் 552 வது காலாட் பிரிகேட் மேற்பார்வையின் கீழ் இந்த வீடு நிர்மாணிக்ப்பட்டது.

552 வது காலாட் பிரிகேட் தலைமையகம் மற்றும் அதன் பொறுப்புப் பகுதிக்கு விஜயம் செய்வதோடு அன்றைய விஜயம் நிறைவுற்றது. ஒவ்வொரு இடத்திலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]